இச்சம்பவம் தொடர்பாக திருவாய்மருதூர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
பாட்டாளி மக்கள் கட்சியின் ராமலிங்கம், கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் மைதென் அகமது ஷாலி. கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு, அவரது வீட்டில் சோதனை செய்தது.
“திருநெல்வேலியில் இருக்கும் தென்காசியில் உள்ள மைதென் அகமது ஷாலியின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது” என்று தேசிய புலனாய்வு அமைப்புத் தகவல் தெரிவித்துள்ளது.
ராமலிங்கம் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கருதி கடந்த ஜூன் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் ஷாலி. அவருக்கு வயது 50.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கருதி, முன்னதாக திருச்சியைச் சேர்ந்த முகமது ஃபருக், தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் ராமலிங்கம், தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, ஷாலி மற்றும் அவருடைய கூட்டாளிகள் சிலர், வழிமறித்து கையை வெட்டியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் ராமலிங்கம் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக திருவாய்மருதூர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவைத் தொடர்ந்து 10 பேரை தமிழக போலீஸ் கைது செய்து விசாரித்தது. பின்னர் வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.