தன் மீது நடந்த தாக்குதலால் அத்வாலே அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
Thane: தானே அடுத்துள்ள அம்பர்நாத் பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழாவில் அமைச்சர் தனது உரையை முடித்து விட்டு கீழே இறங்கும் போது, அவர் மீது மர்ம நபர் தாக்குதலில் ஈடுபட தொடங்கினார். அவரது முகத்தில் அந்த நபர் அடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. எனினும் தாக்குதலில் ஈடுபட்ட அந்த இளைஞர் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது, அமைச்சரின் உதவிக்காக அவரது ஆதரவாளர்கள் ஒருசிலர் உடனடியாக அவரை சூழ்ந்துகொண்டனர், தொடர்ந்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து, அத்வாலேயின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அந்த நபரை கீழே இழுத்துச்சென்று கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. எனினும் தாக்குதலில் ஈடுபட்ட அந்த இளைஞர் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக உள்ளது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அத்வாலே, உடனடியாக மும்பை புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.