Read in English
This Article is From May 31, 2019

எதிர்க்கட்சித் தலைவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா சொல்லிக் கொடுத்த பாபா ராம்தேவ்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டின் பொருளாதாரம், கருத்தியல் மற்றும். கலாசார இழப்புகளிலிருந்து சுதந்திரம் பெறும்.

Advertisement
இந்தியா Edited by

கபாலபதி என்ற யோக மற்றும் ‘அனுலோம் விலோம்’ என்ற மூச்சு பயிற்சியும் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். யோகா குரு ராம்தேவ் எதிர்க்கட்சி தலைவர்களின் மன அழுத்ததைக் குறைக்க ‘கபாலபதி' யோகாவை செய்யுமாறு அறிவுறுத்துகிறார். இனி வரும் 10 முதல் 15 ஆண்டுகள் இந்த பயிற்சி எதிர்க்கட்சி தலைவர்கள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்  நாட்டின் பொருளாதாரம், கருத்தியல் மற்றும். கலாசார இழப்புகளிலிருந்து சுதந்திரம் பெறும். அமித் ஷா, பியூஸ் கோயல் மற்றும் நிதின் கட்கரி உட்பட பலரும் நாட்டிற்காக அடுத்த 5 ஆண்டுகளில் கடுமையாக உழைப்பார்கள் என்று ராம்தேவ் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் 10 முதல் 15 ஆண்டுகள் மன அழுத்தத்தை எதிர்கொள்ள கபாலபதி என்ற யோக மற்றும் ‘அனுலோம் விலோம்' என்ற மூச்சு பயிற்சியும்  செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

Advertisement

நேற்று பதவியேற்பு விழாவில் 6,000 விருந்தினர்கள், அரசியல் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பாலிவுட் மற்றும் பிற மாநில திரைத்துறையினரும் கலந்துகொண்டனர்

Advertisement