This Article is From Jun 05, 2019

இன்னைக்கு பிரியாணி மட்டும் ஸ்பெஷ்ல் இல்லங்க  இந்த ஐட்டங்களும் தான்…! மறக்காம கேட்டு சாப்பிடுங்க

ரம்ஜான் என்றாலே என்றாலே நம் மனதில் எழும் சித்திரம் பிரியாணியாக மட்டுமே இருக்கும். ஆனால் இந்த நாளில் பிரியாணி மட்டுமே பிரதானம் இல்லங்க. கடல்பாசியில் செய்யப்படும் இனிப்பும், தித்திப்பான வட்லாப்பமும் இன்றைய நாளுக்கான சிறப்பான உணவுகள்.

இன்னைக்கு பிரியாணி மட்டும் ஸ்பெஷ்ல் இல்லங்க  இந்த ஐட்டங்களும் தான்…! மறக்காம கேட்டு சாப்பிடுங்க

ராம்ஜான் நாளான இன்று பிரியாணி சமூக வலைதளங்களில் விடாமல் பலரும் ஷேர் பண்ணக்கூடிய புகைப்படமாக இருக்கும். பிரியாணி வேண்டி நண்பர்களை தேடுவதும், பிரியாணி கேட்டு பலவிதமான மீம்ஸ்களையும் பார்க்க முடிகிறது. 

ரம்ஜான் என்றாலே என்றாலே நம் மனதில் எழும் சித்திரம் பிரியாணியாக மட்டுமே இருக்கும். ஆனால் இந்த நாளில் பிரியாணி மட்டுமே பிரதானம் இல்லங்க. கடல்பாசியில் செய்யப்படும் இனிப்பும், தித்திப்பான வட்லாப்பமும் இன்றைய நாளுக்கான சிறப்பான உணவுகள். சிலர் வீடுகளில் பிரட் அல்வா செய்வார்கள். 

பிரியாணியில் விதவிதமான பிரியாணி உண்டு. திண்டுக்கல் பிரியாணி, மொகல் பிரியாணி, என்று விதவிதமான பிரியாணியும் அதற்கான செய்முறையும் இணையம் முழுவதும் குவிந்து கிடக்கிறது.

ரம்ஜான் நோன்பு காலத்தில் தண்ணீர் தாகத்தை  தணிக்கவும். உடல் தண்ணீர் சத்து இல்லாமல் வறண்டு விடாமல் இருக்க கடல்பாசியில் செய்யப்படும் இனிப்பு பறிமாறப்படும். இது ஒரு ஜெல்லி போன்றதொரு இனிப்புதான். 500 கிராம் பாலுக்கு 5 முதல் 8 கிராம் கடல் பாசி (அகர் அகர் அல்லது சைனா கிராஸ்) தேவைப்படும்.

இது முழுக்க முழுக்க தாவர வகையை சேர்ந்ததுதான். 8 கிராம் கடல் பாசியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி பின் நன்றாக கொதித்து கரைந்துள்ள கடல்பாசியை பாலில் ஊற்றி கலக்கவும் இரண்டும் கலந்து நன்றாக கொதித்தபின் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரைந்தபின் வடிகட்டி பாத்திரத்தில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து செட் செய்யவும். சுவையான கடல் பாசி இனிப்பு தயார்.

மற்றொரு ரெசிப்பியான வட்லாப்பம் மிகவும் தித்திப்பான உணவுகளில் ஒன்று. முந்திரியை 20 முதல் 30 எண்ணிக்கையிலானது தண்ணீரில் ஊறவைக்கவும் அரை ஸ்பூன் கசகசாவையும் ஊறவைக்கவும். 

மூன்று முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைக்கவும். 

பாலை நன்றாக காய்ச்சி தேவையான இனிப்பு சேர்த்து கலந்து வைக்கவும். 

பாலுடன் முட்டைக்கலவையை சேர்க்கவும். 

மிக்ஸியில் நன்றாக ஊறவைத்த  முந்திரி மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து எடுத்து அதையும் பால் முட்டைக் கலவையுடன் சேர்க்கவும்.

 வாசனைக்கு ஒரு துளி ஏலக்காய் பொடி சேர்க்கவும். 

இட்லி பாத்திரத்தில் வைத்து  ஆவியில் வேகவைத்து எடுத்தால் வட்லாப்பம் ரெடி

ரம்ஜான் பெருநாளில் விருந்து சாப்பிடச் சென்றால் மறக்காமல் இந்த இரண்டு ஐயிட்டத்தையும் சுவைக்க மறந்து விடாதீர்கள்.

.