Read in English
This Article is From May 11, 2019

இந்திய கிறிஸ்துவர் கட்டிய மசூதி: தினம் 800 முஸ்லீம் தொழிலாளர்களுக்கு இஃப்தார் விருந்து

49 வயதான ஷாஜி ஷிரியன் கேரளா காயம்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஊழியர்கள் தங்குவதற்கான அறையை வாடைகைக்கு விடும் மேன்சன் நடத்தி வருகிறார். 53 நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஷாஜியின் மேன்சனில் தங்கி வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

49 வயதான ஷாஜி ஷிரியன் கேரளா காயம்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

Dubai:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முஸ்லீம் தொழிலாளர்களுக்கு ஒரு மசூதியை கட்டியுள்ளார் இந்திய கிறிஸ்துவ தொழிலதிபர். ரம்ஜான் மாதத்தில் கிட்டத்தட்ட 800 தொழிலாளர்களுக்கு நோன்பு சாப்பாடுகளையும் வழங்குகிறார்.

49 வயதான ஷாஜி ஷிரியன் கேரளா காயம்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஊழியர்கள் தங்குவதற்கான அறையை வாடைகைக்கு விடும் மேன்சன் நடத்தி வருகிறார். 53 நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஷாஜியின் மேன்சனில் தங்கி வருகின்றனர். 

ஷாஜி கடந்த ஆண்டு மசூதியை தங்கி வேலை பார்க்கும் முஸ்லீம் தொழிலாளர்களுக்காக கட்டியுள்ளார். புனித ரமலான் மாதத்தின் போது பிரார்த்தனை செய்வதற்கு அருகில் உள்ள மசூதிக்கு டாக்ஸிகள் மூலம் செல்வதால் வருவாயின் பாதியை செலவழித்ததைப் பார்த்த பிறகு மரியம் உம் ஈஸா (மரியா, இயேசுவின் தாயார்) மசூதியை அவர் கட்டினார். 

ரம்ஜான் நோன்பு காலம் மே 7 தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பிரியாணியை செய்து இஃப்தார் விருந்தும் அளிக்கப்படுகிறது. இந்த மேன்சனில் உயர் மட்ட அதிகாரிகளும் தங்கி வந்தாலும் மசூதிக்கு என்று வரும் போது எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் அனைவரும் இணைந்து இறைவனை தொழுகிறோம் என்று 63 வயதான அப்துல் கயம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கூறுகிறார்.

Advertisement

Advertisement