திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் வரையப்பட்டுள்ள கோலம்.
குடியுமை சட்ட திருத்தம் (Citizenship Amendment ACt), தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) ஆகியவற்றை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனி மொழி உள்ளிட்ட திமுகவினரின் இல்லங்களில் கோலங்கள் வரையப்பட்டுள்ளன. முன்னாக சென்னையில் எதிர்ப்பு கோலங்கள் வரைந்த 6 பெண்கள் கைது செய்ப்பட்டிருந்தனர். இதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆளும் அதிமுக நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது. ஆனால் திமுக இதற்கு எதிராக வாக்கு அளித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 23-ம்தேதி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து திமுக சென்னையில் பேரணி நடத்தியது. இதுதொடர்பாக 8 ஆயிரம்பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
தற்போது, CAA, NRC க்கு எதிராக கோலப் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. சென்னையில் கோலம் வரைந்த பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவரது ஆழ்வார்ப்பேட்டை, கோபாலபுர இல்லங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சி.க்கு எதிராகவும் கோலங்கள் வரையப்பட்டிருந்தன.
இதேபோன்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் இல்லத்திலும் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக கோலம் வரையப்பட்டிருந்தது.
திமுக மகளிரணியை சேர்ந்தவர்கள் கோலங்களை வரைந்து #DMKkolamProtest என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.