ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில் அரசு இல்லத்தை காலி செய்த ரஞ்சன் கோகாய்!
New Delhi: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 17ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவரது அரசு இல்லத்தை காலி செய்ய ஒரு மாத காலஅவகாசம் உள்ளது. எனினும், அவர் மூன்றே நாட்களில் இல்லத்தை காலி செய்துள்ளார்.
தொடர்ந்து, ரன்ஜன் கோகோய், அவருக்கு அரசு மாற்றாக வழங்கிய 5 கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவிற்கு செல்கிறார். இதேபோல், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹாரும் ஒரே வாரத்தில் தனது இல்லத்தை காலி செய்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வரலாற்று முக்கியமான வழக்கில் முக்கிய தீர்ப்பை அளித்துவிட்டு தனது பணியில் இருந்து நீதிபதி ரன்ஜன் கோகாய் ஓய்வு பெற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
தனது கடைசி வேலை நாளில், உச்ச நீதிமன்றத்தின் 1ஆம் எண் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் ரன்ஜன் கோகாய் அமர்ந்தார். அந்த சமயத்தில் அவருக்கு உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மரியாதை செலுத்தினர்.