பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் பிரான்கோ ஜலந்தருக்கு திரும்பியபோது அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி வரவேற்றனர்.
New Delhi: பாதிரியார் பிரான்கோ தனது சகோதரியை பலமுறை கற்பழித்ததாக குற்றம்சாட்டிய கன்னியாஸ்திரியின் சகோதரர், பாதிரியார் பிரான்கோவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு ஜலந்தர் திரும்பியது அவரது ஆதாரவாளர்கள் மலர்தூவி வரவேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத அடையாளமாக பிரான்கோவை நினைத்து அவருக்கு வரவேற்பு வழங்கப்படுவதை நினைத்து, அவர் வெட்கப்பட வேண்டுமென்று அவர் கூறினார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், அவர் குற்றமற்றவர் அல்ல, மேலும் அவர் இதுகுறித்து வருத்தப்படுவதாக தெரியவில்லை என்று கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறினார்.
பாதிரியார் பிரான்கோ (54) நேற்று ஜலந்தருக்கு திரும்பிய போது அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். அப்போது தன்னுடைய ஆதரவாளர்களை கண்டு புன்னகைத்தார்.
கடந்த மாதம் கற்பழிப்பு புகார் சுமத்தப்பட்ட பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து மூன்று நாள் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார். கோட்டயம் ஜெயிலில் மூன்று வாரத்தை கழித்தப் பின்னர் பிரான்கோவிற்கு கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.