This Article is From Dec 13, 2019

“Rape in India” என ராகுல் ஏன் சொன்னார்..?- BJPக்கு நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுத்த கனிமொழி!

Rape in India Row - 'நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா' என்று கூறுகிறார். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், ‘ரேப் இன் இந்தியாவாக' இருக்கிறது என்று விமர்சித்தார்'

“Rape in India” என ராகுல் ஏன் சொன்னார்..?- BJPக்கு நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுத்த கனிமொழி!

Rape in India Row - எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 

Rape in India Row - அண்மையில் ஜார்கண்ட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் 'ரேப் இன் இந்தியா' என்று பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கருத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், வரலாற்றில் முதன்முறையாக இந்திய பெண்கள் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு தலைவரே அழைப்பு விடுத்ததாக அவர் சாடினார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 

முன்னதாக ராகுல், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். அதில், நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா' என்று கூறுகிறார். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், ‘ரேப் இன் இந்தியாவாக' இருக்கிறது என்று விமர்சித்தார். 

n5befgdo

உத்தர பிரதேசத்தில் நரேந்திர மோடி அரசின் எம்எல்ஏவால் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின் அந்த பெண் ஒரு விபத்தில் சிக்கினார். இது குறித்து ஒரு வார்த்தை கூட நரேந்திர மோடி பேசவில்லை,” என்று காட்டமாக பேசினார். 

இதை மேற்கோள்காட்டி, "இதுபோன்ற கருத்துக்களை பேசும் நபர்களுக்கு இந்த அவையில் உறுப்பினராக இருக்க தார்மீக உரிமை இல்லை' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

இன்று மக்களவைக் கூடியதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது, திமுக எம்பி கனிமொழி, இது பற்றி பேசுகையில், “முதலாவதாக நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி, பேசியது அவைக்கு உள்ளே அல்ல. வெளியே. இரண்டாவது, பிரதமர் நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா' என்று சொல்வதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது. தினம் தினம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அதைத்தான் ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார்,” என்று பேசினார். 


 

.