Read in English
This Article is From Aug 31, 2018

போலீஸ் வழக்கு பதியாததால், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் தற்கொலை

ஷாஜஹான்பூரில், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 27 வயது பெண் தீக் குளித்ததால் பலியாகினர்

Advertisement
இந்தியா
Lucknow:

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 27 வயது பெண் தீக் குளித்ததால் பலியாகினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது 95% தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவரது 12 வயது மகனுக்கு 15% தீக்காயம் ஏற்பட்டிருந்தது. மகனின் உடல் நிலை சீராக உள்ளது.

அவர இறக்கும் முன் கொடுத்த வாக்கு மூலத்தில், தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது காவல் துறை வழக்கு பதியவில்லை. அவர்கள் ஆகஸ்ட் 18-ம் தேதி மீண்டும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த பெண் தற்கொலை முயற்சி செய்யும் போது, அவரது கணவர் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

பலியான பெண்ணும் அவரது கணவரும், கடந்த ஒரு மாதமாக அதே ஊரைச் சேர்ந்த 3 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியச் சொல்லி காவல் துறையினரிடம் மன்றாடியுள்ளனர். காவல் துறை வழக்கு பதிவதற்கு பதிலாக, குற்றாவாளிகள் தரப்பு தரும் பணத்தை வாங்கிக் கொண்டு சமாதானமாகுமாறு கூறியதாக, அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

Advertisement

“அரசு அதிகாரிகள் அந்த பெண்ணிடம் இருந்து இறக்கும் முன் வாக்கு மூலத்தை வாங்கியுள்ளனர். பெண்ணின் கணவர் சொன்ன ஒருவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் வாக்கு மூலத்தை வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக” காவல் துறை தலைவர் ஷிவசிம்பி சன்னப்பா தெரிவித்துள்ளார்.

ஒரு ஆய்வாளர் மற்றும் 2 உதவி ஆய்வாளர்கள் வழக்கு பதிய மறுத்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சன்னப்பா தெரிவித்துள்ளார்.

Advertisement

தகவல் படி, அந்தப் பெண் 6 மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதை வெளியில் சொன்னால், அவரது 12 வயது மகனை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. கடைசியாக அந்தப் பெண் தனது கணவரிடம் ஒரு மாதத்துக்கு முன் தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறியிருக்கிறார். பின் இருவரும் காவல் துறையிடம் சென்றிருக்கின்றனர். ஆனால் காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், மறுபடியும் அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனை அடுத்து தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

Advertisement