இந்த வழக்கை மூத்த அதிகாரி கையாள்வார் என்றும், வழக்கு வேகமாக விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. (கோப்புப் படம்)
Jaipur: ராஜாஸ்தானைச் சேர்ந்த பதின் வயதுப் பெண் ஒருவரை, 3 பேர் கடத்தியுள்ளனர். தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தும் துன்புறுத்தியும் வந்த அவர்களிடமிருந்து அந்தப் பெண் தப்பியுள்ளார். அவர்களிடமிருந்து தப்பிக்க ராஜஸ்தான் டவுனின் தெருக்களில் நிர்வாணமாக ஓடியுள்ளார் அந்தப் பெண். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் பில்வாராவில் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது உறவினப் பெண் மற்றும் அவரது தோழியும் கோயிலுக்குச் செல்லும் வழியில், 3 ஆண்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். உறவினப் பெண் தப்பித்துவிட, பதின் பருவப் பெண் அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார். அவரை ஆள் அரவமற்றப் பகுதிக்கு கடத்திச் சென்று, அந்த மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தப்பித்துச் சென்ற இன்னொரு பெண், அருகிலிருந்த சந்தைக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் உதவி கேட்டுள்ளார். திடுக்கிட்ட ஒருவர் அந்தப் பெண்ணுடன், பதின் பருவப் பெண்ணைக் கடத்திய இடத்துக்குச் சென்றுள்ளார்.
பதின் பருவப் பெண் துன்புறுத்தப்படுவதை, காப்பாற்ற வந்த நபர் பார்த்துள்ளார். அவரைப் பார்த்த மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்றுள்ளனர்.
பதின் பருவப் பெண், தன்னைக் காப்பாற்ற வந்த நபரைப் பார்த்து பயந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார். பின்னர்தான் அந்த நபர், தனக்கான உடையுடன் வருவதை அறிந்து நின்றுள்ளார் அந்தப் பெண்.
பில்வாராவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிபாரி, ஹரேந்திர மாவர், “சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்களும் கோயிலுக்குப் போகும்போது, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். மற்ற இரு பெண்களும் தப்பித்துவிட, ஒருவர் மட்டும் அவர்களிடம் சிக்கி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்” என்று விளக்குகிறார்.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, பட்டியலினத்தவர்களுக்கு எதிராக வன்முறையை ஏவியது உள்ளிட்டவற்றின் கீழ் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை மூத்த அதிகாரி கையாள்வார் என்றும், வழக்கு வேகமாக விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.