சென்னை: மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தின் திட்ட வரைப்படம் வெளியாகியுள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லுடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கருணாநிதியின் நல்லுடல் மெரினாவில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணை நடைப்பெற்று வந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லுடல் மெரினாவில் அடக்கம் செய்வதற்கான உத்தரவை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே விரைவு அதிரடைப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலக் குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதால், நேற்று மாலை 6.10 மணிக்கு இயற்கை ஏய்தினார்.