This Article is From Oct 23, 2019

தீபாவளி இரவன்று பலி கொடுக்கப்படவிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள 5 ஆந்தைகள் மீட்பு!!

அரியவகை உயிரினங்களை அதிர்ஷ்டன் கருதி பலியிடுவது என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. நல்ல நாளில் அதனை செய்வதால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று குறிப்பிட்ட சிலர் நம்புகின்றனர்.

தீபாவளி இரவன்று பலி கொடுக்கப்படவிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள 5 ஆந்தைகள் மீட்பு!!

விசாரணையில் ஆந்தைகள் லட்சுமி தேவிக்காக மலை உச்சியில் வைத்து பலியிடப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Ghaziabad:

அரியவகை ஆந்தைகள் ஐந்தினை டெல்லி அருகேயுள்ள காஜியாபாத்தில் போலீசார் மீட்டுள்ளனர். விசாரணையின் இதன் மதிப்பு ரூ. 1 கோடி எனவும், அதிர்ஷ்டத்திற்காக தீபாவளி இரவன்று அவை பலி கொடுக்கப்பட இருந்தவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரியவகை உயிரினங்களை அதிர்ஷ்டன் கருதி பலியிடுவது என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. நல்ல நாளில் அதனை செய்வதால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று குறிப்பிட்ட சிலர் நம்புகின்றனர்.

அந்த வகையில் ஆந்தைகள் தீபாவளியன்று பலிகொடுக்கப்படவிருந்தன. அவற்றை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். ஆந்தைகளை மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தல் கும்பல் ஒன்று டெல்லி அருகே காஜியாபாத்தில் கடத்திச் சென்று கொண்டிருந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமித் மற்றும் படேல் என்பவர்கள் சிக்கினர். அவர்களை தாங்கள் வைத்திருந்த ஆந்தைகளை மறைக்க முயன்றபோது, அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 

விசாரணையில் ஆந்தைகள் லட்சுமி தேவிக்காக மலை உச்சியில் வைத்து பலியிடப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆந்தைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்த போலீசார், கடத்தல்காரர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

.