हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 21, 2020

நேபாளத்தில் முதன்முதலாக அரிய வகை மஞ்சள் நிற ஆமை பிடிப்பட்டது!

மரபணு மாற்றம் காரணமாக இதுபோன்ற அரியவகை நிறங்களில் ஆமை உருமாறுவதாக கூறப்படுகிறது

Advertisement
விசித்திரம் Posted by

நேபாளத்தில் பிடிபட்ட மஞ்சள் நிற ஆமை

நேபாளத்தில் முதன்முதலாக மஞ்சள் நிற ஆமை பிடிப்பட்டுள்ளது. இந்த ஆமை விஷ்ணுவின் அவதாரமாக மக்கள் பார்க்கின்றனர். இதுகுறித்து மிதிலா வனஉயிரன அறிக்கட்டளை கூறுகையில், இந்த ஆமை இந்திய பிளாப்ஷெல் ஆமை அல்லது லிஸிமை பங்டாட்டா ஆண்டர்சோனி என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்ததாகும். 

மரபணு மாற்றம் காரணமாக இதுபோன்ற அரியவகை நிறங்களில் ஆமை உருமாறுவதாக கூறப்படுகிறது. இது குரோமோட்டிக் லுஸியம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் 5வது தடவையாக இந்த இனம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. நேபாளத்தில் இது முதன்முறையாக பிடிபட்டுள்ளது. 

இந்த ஆமை தற்போது விஷ்ணுவின் அவதாரமாக மக்கள் பார்த்து வருகின்றனர். இணையதளத்தில் மஞ்சள் நிற ஆமையின் புகைப்படம் வைரலாகியுள்ளது. 

இதற்கு முன்பு ஒடிசாவில் இதேபோல் மஞ்சள் நிற ஆமை பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியைப் படிக்க இங்குக் க்ளிக் செய்யவும்.

Advertisement