This Article is From Jul 22, 2019

கருப்பு டால்பின் தெரியும்… அபூர்வமான வெள்ளை டால்பின்..?- வைரல் வீடியோ!

இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு, அபூர்வமான அல்பினோ டால்பினின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவியது.

கருப்பு டால்பின் தெரியும்… அபூர்வமான வெள்ளை டால்பின்..?- வைரல் வீடியோ!

அபூர்வ டால்பினுக்கு ‘கோஸ்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

டால்பின் என்று சொன்னவுடன், வழவழவென கருப்பு நிறத்தில் வேகமாக நீந்தும் உயிரினம் மனக் கண்களில் வந்து போகும். ஆனால், வெள்ளை நிறத்திலும் டால்பின் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா. அது குறித்து நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 

கேப்டன் பால் கீட்டிங் என்பவர், பிக்டன் பகுதியில் இ-கோ (E-Ko) டூர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் தனது படகில் கடல் உயிரினங்களை காண்பிக்க சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளார். அப்படி பயணிகளை அழைத்துச் செல்லும்போதுதான் அபூர்வமான வெள்ளை நிற டால்பின் கண்ணில் பட்டுள்ளது. கீட்டிங்கின் மகள், அந்த அபூர்வ டால்பினுக்கு ‘கோஸ்ட்' என்று பெயர் வைத்துள்ளார். 
 

வீடியோவை கீழே பார்க்கவும்:

இது குறித்த வீடியோவை இ-கோ டூர்ஸ் நிறுவனம், தனது யூடியூபில் பகிர்ந்துள்ளது. “கோஸ்ட், மிகவும் அபூர்வமான தென்படும் வெள்ளை டால்பின் இனத்தைச் சேர்ந்தது” என்று வீடியோவுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கீட்டிங், இந்த வெள்ளை டால்பினை வீடியோ எடுப்பதற்கு 2 வாரத்துக்கு முன்னரே பார்த்தாக கூறுகிறார். அதைத் தொடர்ந்து இந்த டால்பின் அடிக்கடி படகில் போகும் போதெல்லாம் காட்சி தருகிறதாம். 

இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு, அபூர்வமான அல்பினோ டால்பினின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவியது. அதைப் போன்ற தற்போது வெள்ளை டால்பின் வீடியோவும் பரவிவருகிறது. 

Click for more trending news


.