This Article is From Sep 04, 2018

கேரள வெள்ளம் : எலிக்காய்ச்சல் பாதிப்பு பற்றிய முக்கிய 5 குறிப்புகள்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தற்போது நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது

கேரள வெள்ளம் : எலிக்காய்ச்சல் பாதிப்பு பற்றிய முக்கிய 5 குறிப்புகள்
Thiruvananthapuram:

கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால், கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தற்போது நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பிறகு, எலிக்காய்ச்சல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய 5 குறிப்புகள்

  1. கேரள மாநிலத்தில் இதுவரை, 372 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். மேலும், நோய் எதிர்ப்பு மருந்துகள் மக்களுக்கு வழங்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.
  2. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதற்கு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, சிறுநீரகத்தில் இரத்த வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்று மருத்துவர் மொகமத் ஜாவித் தெரிவித்துள்ளார்.
  3. எலிக்காய்ச்சல் நோய் எலியின் சிறுநீரில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்களால் பரவக் கூடியது. மறைவிடங்களில் வாழும் எலிகள் வெளியிடும் கழிவுகள் மழை நீருடன் கலந்து விடுவதால், மழை காலத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  4. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதற்கு முன், தலைவலி, தசை வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  5. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், எலிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

.