முகேஷ் அம்பானி மற்றும் அவரின் மனைவி நீதா(AFP)
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்தவிழாவில் உலகத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி, மூத்த தொழில் அதிபர் ரத்தன் டாடா, எல்.என். மிட்டல், அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஷக்திகாந்தா தாஸ், எஸார் இயக்குநர் பிரசாந்த் ரூயா, டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன், வேதாந்த சேர்மன் அனில் அகர்வால் மற்றும் ஹெச்டிஎஃப்சி தீபக் பரேக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி மற்றும் இளைய மகன் ஆனந்த் ஆகியோருடன் வந்தார். அவருடைய குழு நிர்வாகி மற்றும் எம்.பி பரிமால் நாத்வானி தனித்தனியாக வந்தனர்.
தொழிலதிபர்கள் அமைச்சரவையின் முக்கிய அமைச்சரான பாஜக அமித் ஷாவிடம் நேரடியாக வாழ்த்தினை தெரிவித்தனர். பாஜக தலைமையிலான கூட்டணி 303 இடங்களைப் பெற்றது. ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் சுமார் 8,000பேர் கலந்து கொண்டனர்.
பிம்ஸ்டேக் (வங்காளதேசம், இந்தியா, மியான்மர், ஶ்ரீலங்கா, தாய்லாந்து நேபால் மற்றும் பூட்டான்) ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பெருநிறுவனத் தலைவர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ரமேஷ் சந்த், ராகேஷ் பார்தி மிட்டல், ராஜன் பார்த்தி மிட்டல், பொருளாதார விவகாரங்களுக்கான சுபாஷ் சந்திர கார்க், ஐடி தொழில்துறை அதிபர் என்.ஆர் நாராயண மூர்த்தி, வீடியோகான் ராஜ்குமார் தூத், கல்யாண் ஜுவல்லர்ஸ் இயக்குநர் டி.எஸ் கல்யாணராமன் ஐயர், பிநோத் செளத்திரி