This Article is From Dec 11, 2018

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார்

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பாக உர்ஜித் படேல் கூறியிருக்கிறார்.

தனது ராஜினமா உடனடியாக நடைமுறைக்கு வருவதாக உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • RBI is locked in major tussle with the government over its autonomy
  • Government has appointed several of its nominees to the board
  • Urjit Patel says quitting effective immediately for personal reasons
New Delhi:

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்கிறார். அவரது திடீர் முடிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.  நாளுக்கு நாள் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல்  மீதான நெருக்கடிகள் அதிகரித்தன.

கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் போர்டு மீட்டிங் நடைபெற்றது. இதன் முடிவில் கவர்னர் உர்ஜித்படேல் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  அவ்வாறான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

 இந்த நிலையில்,  உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தனிப்பட்ட காரணங்களுக்காக ரிசர்வ் வங்கியின் கவர்னர் என்ற பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக  நான் செயல்பட்டதை நான் கவுரவமாக கருதுகிறேன். 

ரிசர்வ் வங்கி ஊழியர்கள், நிர்வாகம், எனக்கு ஆதரவாய் இருந்தவர்களின் உதவியால்தான்  இத்தனை ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் என்னால் செயல்பட முடிந்தது. எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், கடினமாக உழைத்த ரிசர்வ் வங்கியின் ஊழியர்களுக்கும், அதிகாரிகள் மற்றும்  நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு உர்ஜித் படேல் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவரது முடிவு நாடு முழுவதும் அதிர்வலைகளை  ஏற்படுத்தி வருகிறது.  

.