This Article is From Sep 24, 2019

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி ரூ. 1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது!!

ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கட்டுப்பாட்டால், வங்கியில் பணம் போட்டவர்கள் என்ன செய்வது என்கிற குழப்பத்திலும், அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

6 மாதங்களுக்கு கட்டுப்பாடு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டு வங்கியில் (PMC Bank) ரூ. 1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் அந்த வங்கியில் லட்சக்கணக்கில் பணம் போட்டு வைத்திருப்பவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

பி.எம்.சி. வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கட்டுப்பாடு 6 மாதங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பி.எம்.சி. வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள், சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு என எந்த வகை கணக்காக இருந்தாலும், ரூ. 1000-க்கு மேல் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ct67qqe

ரிசர்வ் வங்கியின் அனுமதியி இன்றி, யாருக்கும் கடன்களை கொடுக்க பி.எம்.சி.வங்கியால் முடியாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கான முழு விவரம் வெளிவரவில்லை. இருப்பினும் இந்த நடவடிக்கை பி.எம்.சி. வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விரக்தி அடைந்திருந்த அவர்கள், மும்பையில் உள்ள பி.எம்.சி. வங்கியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பி.எம்.சி. வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்னும் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். 

.