This Article is From Jan 25, 2019

‘முதல்வர் ஆக நான் ரெடி..!’- சூளுரைத்த கமல்

மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தனது உரையை அமைத்துக் கொண்டார் கமல்

‘முதல்வர் ஆக நான் ரெடி..!’- சூளுரைத்த கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இன்று சென்னையில் இருக்கும் மகளில் கிறித்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்

ஹைலைட்ஸ்

  • லோக்சபா தேர்தலில் கமல் கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது
  • தொடர்ந்து தீவிரமாக அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார் கமல்
  • அரசியலுக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்த உள்ளார் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இன்று சென்னையில் இருக்கும் மகளில் கிறித்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘நான் முதல்வராகத் தயார்' என்று பகிரங்கமாக தெரிவித்தார். 

மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தனது உரையை அமைத்துக் கொண்டார் கமல். முதலாவதாக ஒரு மாணவர், ‘அரசியலுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன ?' என்றதற்கு, ‘அரசியலுக்கு வரவிரும்பிவிட்டாலே நீங்கள் வந்துவிட்டீர்கள் என்பது தான் உண்மை. எனது அறிவுரை என்பது உங்களுக்கு தேவையில்லை. வாக்குச்சாவடிக்கு சென்ற பின்னர் சின்னங்களை பார்த்து வாக்களிக்காதீர்கள். எது உங்களுக்கான அரசியல் கட்சி, மக்கள் நலனிற்காக பாடுபடும் கட்சி என்பதை தேர்ந்தெடுங்கள். மக்கள் நீதி மய்யம் அதில் ஒரு கட்சியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது' என்று பதிலளித்தார் கமல்.

தொடர்ந்து அவர், ‘அரசியலில் ஏன் குதித்தீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள், அவர்களுக்கு எனது பதில், நான் மேலிருந்து கீழே குதிக்கவில்லை, கீழிருந்து மேல் குதிக்கிறேன், அதாவது நான் எழுகிறேன் என்பது தான் உண்மை' என்றார்.

அப்போது கல்லூரி மாணவிகள் சிலர், ‘நீங்கள் முதல்வராக வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். அதற்குபதிலளித்த கமல், ‘நீங்கள் எதுவாக நானாக வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அதுவாக நான் தயார். நான் உங்கள் முதல்வராக வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்' என்று குறிப்பிட்டார்.

.