This Article is From Jan 23, 2020

முதல்வர் பதவியை ஓபிஎஸ்க்கு விட்டுக்கொடுக்க தயாரா? எடப்பாடிக்கு துரைமுருகன் கேள்வி

அப்படி என்றால் ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க தயாரா?.

முதல்வர் பதவியை ஓபிஎஸ்க்கு விட்டுக்கொடுக்க தயாரா? எடப்பாடிக்கு துரைமுருகன் கேள்வி

கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? - துரைமுருகன் கேள்வி

முதல்வர் பதவியை ஓபிஎஸ்க்கு விட்டுக்கொடுக்க தயாரா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 

தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் என்றும் பேசினார். 

தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழுவினர், அதன் தலைவர் துரைமுருகன் தலைமையில் நேற்று சேலத்திற்கு வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுகூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கூறியதாவது, அதிமுகவில் எல்லோரும் முதல்வர் பதவிக்கு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். 

அப்படி என்றால் ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க தயாரா?. வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள். கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? நேரு, தேவகவுடா, முலாயம் சிங் போன்றவர்களின் வீட்டில் இருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?, என்று கேள்வி எழுப்பினார். 

.