Read in English
This Article is From Feb 08, 2019

''பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் '' - பாஜகவுக்கு கர்நாடக முதல்வர் சவால்

கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஒரு கட்சிக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது குமாரசாமி அரசுக்கு 118 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • இன்று மதியம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
  • எதிர்ப்பு தெரிவிக்கும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி நீக்கப்பட வாய்ப்பு
  • குமாரசாமி அரசுக்கு மூட நம்பிக்கை இருப்பதாக பாஜக விமர்சனம்
Bengaluru:

பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி சவால் விடுத்துள்ளார். கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலத்தில் ஆட்சியை  தக்க வைத்துக்கொள்ள ஒரு கட்சிக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது குமாரசாமி அரசுக்கு 118 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கர்நாடகத்தில் காங்கிரசும் - மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி பொறுப்பில் இருக்கிறார். இதற்கிடையே ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக தொடர்ந்து சதி செய்து வருகிறது என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 

குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கவுடா, தாடல் மற்றும் கோபல்சாமி ஆகியோர் எதிர்க்கட்சிக்கு தாவுவார்கள் என்று தகவல்கள் பரவின. இந்தநிலையில் அவர்கள் மூன்றுபேருக்கும் முக்கிய பொறுப்புகள் அரசில் அளிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

தாடலுக்கு எஸ்.சி., எஸ்.டி., நல்வாழ்வு வாரிய தலைவர் பொறுப்பும், கோபால்சாமிக்கு நீர்வளத்துறையில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டன. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் பலம் இருந்தால் போதும் என்ற நிலையில், குமாரசாமி அரசுக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. 

தற்போது கர்நாடகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக தொடர்நது வலியுறுத்து வருகிறது. இந்த நிலையில் எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளேன் என்று குமாரசாமி அறிவித்துள்ளார். 

Advertisement

கர்நாடக பட்ஜெட் இன்று மதியம் 12.32-க்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதனை விமர்சித்துள்ள பாஜக எம்எல்ஏ அசோக், மூட  நம்பிக்கைகளின் அடிப்படையில் குமாரசாமி அரசு செயல்படுகிறது. பட்ஜெட் எப்போதும் 11 அல்லது 12 மணிக்குதான் தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். 

Advertisement