This Article is From Jan 28, 2019

''பதவி விலகத் தயாராக இருக்கிறேன்'' - கர்நாடக முதல்வர் பேட்டியால் பரபரப்பு

சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என காங்கிஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள் என்பது குறித்து குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு குமாரசாமி கோபமாக பதில் அளித்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லை மீறுவதாக கூறுகிறார் குமாரசாமி

Bengaluru:

கர்நாடக அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் பதவி விலக தயாராக இருப்பதாக  அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியிருப்பது பரபரப்ப ஏற்படுத்தி வருகிறது. 

சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என காங்கிஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள் என்பது குறித்து குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கோபமாக பதில் அளித்த குமாரசாமி பதவி விலக தயார் என்று கூறியுள்ளார். 

குமாரசாமி தனது பேட்டியில், ''காங்கிரஸ் எம்எல்ஏக்களை அக்கட்சி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கூட்டணி தர்மத்தை அவர்கள் மீறுகின்றனர். இது தொடர்ந்தால் நான் பதவி விலகுவதற்கு தயாராக இருக்கிறேன்.'' என்று கூறினார். 

குமாரசாமியின் ஆட்சி குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் விமர்சித்துள்ளனர். எம்எல்ஏ எஸ்.டி. சோமசேகர் கூறுகையில், ''சித்தராமையா ஆட்சியில் இருந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்'' என்றார். மற்றொரு எம்எல்ஏ புட்டாரங்க ஷெட்டி கூறுகையில், ''எனது முதல்வர் சித்தராமையாதான்'' என்றார். 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்வராக சித்தராமையா இருந்தார். தேர்தலுக்கு பின்னனர் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக குமாரசாமி இருந்து வருகிறார்.

தற்போது கூட்டணி ஒத்துழைப்பு கமிட்டியின் தலைவராக சித்தராமையா இருந்து வருகிறார். கர்நாடக அரசியல் குழப்பம், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கருத்து குறித்து சித்தராமையா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஊடகங்கள்தான் தற்போது பிரச்னையை கிளப்பி வருகின்றன. ஊடகங்கள்தான் ஒருவர் பின் ஒருவராக கேள்விகளை கேட்டு பிரச்னை எழுப்புகிறீர்கள். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் குமாரசாமியுடன் பேசுவேன்'' என்றார். 

.