பாகிஸ்தான் ராணுவத்தினரால் கடந்த புதனன்று அபினந்தன் சிறைபிடிக்கப்பட்டார்.
Attari: பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை வரவேற்க அத்தாரி பகுதியில் பெரும் அளிவிலான மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
அமிர்தரஸிலிருந்து 30 கிமீ. தொலைவில் உள்ள அத்தாரிக்கு பொதுமக்கள் காலை 6 மணி முதல் வர துவங்கினார், காலை 9 மணி அளவிலே பெரும் மக்கள் வெள்ளம் அப்பகுதியில் திரண்டு காட்சியளித்தது.
இதுகுறித்து அமிர்தசரஸ் பகுதிக்கு அபினந்தனை வரவேற்க வந்திருந்த ஜிதேந்தர் என்றவர் கூறும்போது, எங்கள் நாட்டு ஹீரோ மீண்டும் தாய்நாடு திரும்புகிறார். அவருக்கு நாங்கள் பெரும் வரவேற்பு அளிப்போம், பாகிஸ்தான் பிடியில் சிக்கிய போதும் அவ்வளவு தைரியமாக இருந்தவர் அவர் என்று கூறினார்.
விங் கமாண்டர் அபினந்தன் பெற்றோரான, தந்தை விமான வீரர் வர்தமன், தாய் மருத்துவர் சோபனா அபினந்தனை வரவேற்க சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்த போது, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பெரும் மரியாதை அளித்தனர். அவர்கள் அத்தாரிக்கு தனது மகனை வரவேற்பதற்காக வந்துள்ளனர்.
முன்னதாக, இந்திய எந்த நிபந்தனையுமின்றி பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்திய நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவித்தார்.