This Article is From Nov 07, 2018

சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 2,000 வருட பழங்கால “ஒயின்”

மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அகழ்வாராய்ச்சி பகுதியில், ஆராய்ச்சியாளர்களால் 2,000 வருடம் பழமையான “ஒயின்” மாசுபடாத நிலையில் ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது

சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 2,000 வருட பழங்கால “ஒயின்”

கண்டெடுக்கப்பட்ட இந்த திரவத்தின் ஆல்ஹால் அளவை அறிய ஆராய்ச்சி கூடத்திற்க்கு அனுப்ப உள்ளது

Beijing:

மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அகழ்வாராய்ச்சி பகுதியில், ஆராய்ச்சியாளர்களால் 2,000 வருடம் பழமையான “ஒயின்” மாசுபடாத நிலையில் ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 3.5 லிட்டர் எடையுள்ள மஞ்சள் நிற சீன ரக ஒயின், திறந்த உடனே பலமான மணம் அடித்தது.

இந்த பழங்கால ஒயின் வெண்கலத்தாலான பானை ஒன்றில் இத்தனை வருடங்களாக பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என சீனாவில் உள்ள சீங்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட இந்த திரவத்தின் ஆல்ஹால் அளவை அறிய ஆராய்ச்சி கூடத்திற்க்கு அனுப்ப உள்ளதாக லுயாங் நகரத்தில் உள்ள இன்ஸ்டியுட் ஆப் கல்சுரல் ரெலிக்ஸ் ஆண்ட் ஆர்க்கியாளஜியின் தலைவர் ஷீ ஜியாசென் தெரிவித்தார்.

மேலும் அந்த கல்லறையில் மனித எலும்புகளுடன் ஒரு காட்டு வாத்தின் உருவம் கொண்ட விளக்கும் கண்டுபிடிக்கபட்டதென, ஷீ அங்குள்ள பத்திரிகைளுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒயின் மேற்கு ஹான் ராஜ வம்சத்தை (202 B.C - A.D 8) சேர்ந்து இருக்கலாம் எனவும் அது ஆவியாகுவதை எப்படி தடுத்தார்கள் என்ற முழு தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை என சின்ஹூவா பத்திரிகை தெரிவித்தது.

ஆனால் இதுபோன்ற ஆல்ஹகால் குப்பிகளை இதற்கு முன்பும் கண்டு பிடித்ததாகவும். அவை அரிசி அல்லது ஷோர்கவுமை போன்ற மூல பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். மேலும் அவை பெரிய வெண்கல பாத்திரங்களில் வைத்து முக்கிய சடங்குககளில் அவை இடம்பெற்றிருக்கலாம் என சீன ஊடங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 2010, ஆராய்ச்சியாளர்களால் 2,400 வருட பழங்கால , சூப் இருக்கும் பானை ஒன்று சியான் விமானதளம் விரிவாக்கத்தின் போது கண்டெடுக்கப்பட்டது. இந்த கண்டெடுப்பு சீனாவின் பழங்காலத்து போர் வீரர்களான டேரக்கோட்டா வாரியர்களின் காலத்தை சேர்ந்தது என்ற தகவல் குறிப்பிட்டதக்கது.
 

.