Read in English
This Article is From Oct 03, 2018

கேரளா: 3 மாவட்டங்களில் மிக கன மழை - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ள கேரளா தற்போது மீண்டு வரும் நிலையில், மீண்டும் ஓர் வெள்ள அபாய எச்சரிக்கை வந்துள்ளது.

Advertisement
இந்தியா

கேரளாவில் ஆகஸ்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்

New Delhi:

கேரளாவில் உள்ள இடுக்கி, திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வரும் ஞாயிறன்று மிக கடுமையான மழை பெய்யக் கூடும் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுதுள்ளது. 

அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாறி 2 மாவட்டங்களிலும் கனமழையைத் தரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

முன்னெச்சரிக்கையாக வரும் வெள்ளி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், நிலைமை எப்படி மாறக்கூடும் என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய நிறுவனங்களில் இருந்தும் நாங்கள் உதவி கேட்டுள்ளோம். இந்த மூன்று மாவட்டங்களில் சுற்றுலா செல்பவர்கள் மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக மூனாறுக்கு செல்பவர்கள் அதனை தவிர்க்கலாம் என்றார். 

Advertisement

ஆகஸ்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்துள்ள தகவலின்படி 445 பேர் உயிரிழந்துள்ளனர். 14 மாவட்டங்களில் மொத்தம் 54.11 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement