கர்நாடகத்தில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது.
முன்னாள் பிரதமரான தேவகவுடா, ‘இந்தியாவில் இருக்கும் பிராந்திய கட்சிகள் மட்டும் ஒன்று சேர்ந்து பிரதமரை உருவாக்கி விட முடியாது. காங்கிரஸின் துணை அவசியம்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘2019 ஆம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் மாநில மட்டும் பிராந்திய கட்சிகள் மட்டும் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுத்து விட முடியாது. காங்கிரஸின் ஆதரவு மிக அவசியமானதாகும்.
என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமராக ஆக்கப்பட வேண்டும். எனது முழு ஆதரவு அவருக்குத் தான். நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றாக இணைந்து வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக-வைத் தோற்கடிக்கும். எதிர்கட்சிகள் கண்டிப்பாக ஒன்றாக இணையும்' என்று உறுதிபட தெரிவத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், ‘ராகுல் காந்தி தான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என்று யார் சொன்னார். நாங்கள் அது குறித்து இதுவரை அதிகாரபூர்வ முடிவு வெளியிடவில்லையே. நல்ல பலமான கூட்டணி அமைத்து, தேர்தலில் முதலில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு, யார் பிரதமராக்கப்பட வேண்டும் என்பது குறித்து உட்கார்ந்து முடிவு செய்து கொள்ளலாம்' என்று தெரிவித்தார். சிதம்பரத்தின் இந்தக் கருத்து தேசிய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தேவ கவுடாவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கர்நாடகத்தில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)