This Article is From Nov 07, 2018

‘சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குங்கள்!’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

‘சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன

‘சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குங்கள்!’-  அமைச்சர் கடம்பூர் ராஜூ

ரிலீஸுக்கு முன்னதாக சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சர்கார்'. ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கு எதிராக அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. அந்தக் காட்சிகளை படக்குழுவினர், அவர்களாகவே நீக்கி விடுவது நல்லது.

அப்படி சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து நடவடிக்கை எடுப்போம். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வரிடம் விவாதிப்போம்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

ரிலீஸுக்கு முன்னதாக சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் என்ற ராஜேந்திரன் என்பவர்உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த மனுவில், நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், தென்னிந்திய திரைப்படஎழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில் இருகதைகளும் ஒரே கதை என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, ‘சர்கார்' திரைப்படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். ‘சர்கார்' படம்திரையிடும்போது கதை ஆசிரியர் என்று என்னுடைய பெயரை திரையிட உத்தரவிட வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டது. இறுதியில் படக்குழுவினருக்கும் வருணுக்கும் இடையில்சமரசம் ஏற்பட்டது. சர்கார் ரிலீஸ் தொடர்பாக இருந்த சர்ச்சையும் ஓய்ந்தது. இந்நிலையில் அமைச்சர்கடம்பூர் ராஜுவின் கருத்து மீண்டும் சர்கார் குறித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

.