Thiruvananthapuram: ரம்யா ஹரிதாஸ், நடந்து முடிந்த தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார். நாடாளுமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலித் பெண்தான் ரம்யா ஹரிதாஸ். கேரளாவில் வெற்றி பெற்ற ஒரே பெண் இவர் தான்.
வறுமையில் இருந்து பாராளுமன்றம் வரையான அவரது பயணம் பலருக்கும் உத்வேகத்தை கொடுக்ககூடுகிறது. தினசரி கூலி தொழிலாளியாக இந்த வீட்டில் பிறந்தவர். தனது 32 வது வயதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.22,000 மட்டுமே. இவரது தாய் டெய்லராக இருந்த படி செயலூக்கமுள்ள காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
வறுமையில் பிடியில் இருந்திருக்கிறோம், குடிசையில் வாழ்ந்தோம். இப்போது கூட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டில்தான் வாழ்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் வாழ்வில் பல எல்லைகளை கடக்க முடிந்தது என்று தன்னுடைய கடந்த காலத்தை நினைவுகூறுகிறார்.
2011ல் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். ராகுல் காந்தியால் கண்டெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கவைக்கப்பட்டவர். ராகுல் காந்தி மக்களிடம் கருத்தைக் கேட்டு அதன் படி செயல்படுகிறார் என்று கூறுகிறார் ரம்யா ஹரதாஸ் இரண்டு முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் நின்று ட்சிக்கு எதிராக இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் நின்று போட்டியிட்டுள்ளார்.
தனது தேர்தல் வெற்றிக்கு “பெண்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ளேன். பாராளுமன்றத்தில் அவர்களின் குரலாக நான் ஒலிப்பேன். இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வேன்” என்று தெரிவித்தார்.