This Article is From Mar 20, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கிடுக்குப்பிடி போடும் நீதிமன்றம்; அடுத்தது என்ன..?

கடந்த 25 ஆம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கிடுக்குப்பிடி போடும் நீதிமன்றம்; அடுத்தது என்ன..?

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்ற கண்காணிப்பில் ஏன் விசாரணை நடத்தப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சிபிஐ அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறும் இரு அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், புகழேந்தி என்பவர், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனு, தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில்ரமணி மற்றும் நீதிபதி துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், நீதிமன்றம் தமிழக அரசுக்கும் சிபிஐ-யிடமும் பதில் கேட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

பொள்ளாச்சியைச் சேர்ந்த 4 பேர், பிப்ரவரி 12 ஆம் தேதி, 19 வயதான ஒரு பெண்ணை காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை கொடுக்க முயன்றதாவும், அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அந்தப் பெண்ணை மிரட்ட நினைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

ஆனால், அந்த கும்பல் இதைப் போன்று பல பெண்களுக்கு பாலியல் கொடுமை கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளது எனவும், அதை வைத்து பலரை மிரட்டி வந்திருக்கிறது எனவும் அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வெளியாகின. தமிழக அளவில் இந்த விவகாரம் கொந்தளிப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வெளியான தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி ரகம்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வருவதாகவும், இவர்களால், சுமார் 200க்கும் மேலான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த கும்பலின் கைபேசியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்காததால் தொடர்ந்த அந்த கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது.

இதனிடையே, கடந்த 25 ஆம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரை செய்தது. 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.