Read in English
This Article is From Nov 28, 2019

Viral Video: நேரலையில் செய்தி நிருபரை விடாமல் துரத்தும் பன்றி

இந்த காட்சி நேரலையில் வெளியானது. நிகழ்ச்சி நடக்கும் ஸ்டூடியோவில் உள்ள சக ஊழியர்கள் அதைக்கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விடுகின்றனர்.

Advertisement
விசித்திரம் Edited by

பன்றியுடன் போராடும் நிரூபர்

ஏ.என்.டி 1 டிவியின் செய்தி நிரூபரை பன்றி வேலை செய்ய விடாமல் தொடர்ந்து பின்னால் துரத்தியது. ஏ.என்.டி 1 டிவியின் காலை நேர நிகழ்ச்சியான குட்மார்னிங் கிரீஸ் ஒளிபரப்பாகிறது. இதில் செய்தி நிரூபரான  லாசோஸ் மாண்டிகோஸ் என்பவரை பன்றி கடிப்பதற்கு விடாமல் துரத்துகிறது. 

இந்த காட்சி நேரலையில் வெளியானது.  நிகழ்ச்சி நடக்கும் ஸ்டூடியோவில் உள்ள சக ஊழியர்கள் அதைக்கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விடுகின்றனர். நேரலையில், “செய்தி நிருபர் நண்பர்களே மன்னிக்கவும். என்னால் நின்று பேச முடியவில்லை. நின்றால் இந்த பன்றி கடிக்க முயற்சிக்கிறது”  என்று கூறியபடி பேச முயல்கிறார். ஆனாலும் பன்றி விடாமல் துரத்துகிறது.

வீடியோவை 1.3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். பலரும் கேலியான கமெண்டுகளை செய்து வருகின்றனர். 

Advertisement

“லாசோஸ் இது ஒரு பரிதாபத்துக்குரிய பிரச்சினை, கினெட்டாவில் நாங்கள்  எங்கள் காயங்களை எண்ணி வருகிறோம். பெண் பன்றியுடன் வேலை செய்து பாருங்கள்” என்று ஸ்டூடியோவில் இருக்கும் சக ஊழியர் சிரித்தபடி கூறுகிறார். 

Advertisement
Advertisement