This Article is From Dec 26, 2019

நேரலையில் லாட்டரி பரிசு வென்ற Reporter; உடனே ராஜினாமா; அப்புறம் ஒரு ட்விஸ்ட்! #ViralVideo

நேரலையில், லாட்டரி வெற்றி குறித்து செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தனக்கு ஜாக்பாட் அடித்துவிட்டதாக கருதிய நடாலியா, “நாளைக்கு நான் பணிக்கு வரப் போவதில்லை,” என்று கத்தியுள்ளார். 

நேரலையில் லாட்டரி பரிசு வென்ற Reporter; உடனே ராஜினாமா; அப்புறம் ஒரு ட்விஸ்ட்! #ViralVideo

ஜாக்பாட் அடித்ததாக நினைத்த நடாலியாவுக்குப் பின்னர்தான் தெரிந்தது, தாம் வென்றது சொற்பப் பரிசு மட்டுமே என்று…

ஒரு தகவல் வந்தால் அதை மீண்டுமொரு முறை சரி பார்ப்பது என்பது பத்திரிகையாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு. ஆனால், அப்படிப்பட்ட பண்பு இல்லாமல் கேலிப் பொருளாக மாறியுள்ளார் ஒரு நிருபர். அதுவும் நேரலையில் அப்படிப்பட்ட ஒரு மாபெரும் பிழையை அவர் செய்துள்ளார். 

ஸ்பெயின் நாட்டின் ஆர்டிவிஈ என்னும் அரசு ஊடகத்தின் நிருபராக பணியாற்றி வந்துள்ளார் நடாலியா எஸ்குடேரோ. அவர் அந்நாட்டில் விற்கும் கிறிஸ்துமஸ் லாட்டரியில் மிகப் பெரும் தொகையை வென்றுவிட்டதாக நேரலையில் செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தெரியவந்துள்ளது. ஜாக்பாட் அடித்ததாக நினைத்த நடாலியாவுக்குப் பின்னர்தான் தெரிந்தது, தாம் வென்றது சொற்பப் பரிசு மட்டுமே என்று…

நேரலையில், லாட்டரி வெற்றி குறித்து செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தனக்கு ஜாக்பாட் அடித்துவிட்டதாக கருதிய நடாலியா, “நாளைக்கு நான் பணிக்கு வரப் போவதில்லை,” என்று கத்தியுள்ளார். 
 
முதலில் தனக்கு 4 மில்லியன் யூரோ பரிசு கிடைத்துவிட்டதாக நடாலியா எண்ணியுள்ளார். ஆனால், அவருக்குக் கிடைத்தது வெறும் 5,000 யூரோக்கள் (3.96 லட்ச ரூபாய்) மட்டுமே. 

தனது செயலுக்கு டிசம்பர் 22 ஆம் தேதி, ட்விட்டர் மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார் நடாலியா. 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news

.