This Article is From Oct 24, 2018

பில் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டெடுப்பு!

வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட போது பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் வீட்டில் இருந்தார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை

பில் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டெடுப்பு!

ஹிலாரி மற்றும் பில் கிளிண்டனின் வீட்டிலிருந்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

New Delhi:

நியூயார்க் நகரில் இருக்கும் கிளிண்டன் வீட்டிற்கு அருகிலிருந்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் சார்பில் கூறப்பட்டது.

அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனின் பதவி காலம் 2001ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு நியூயார்க் நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் சாபாக் பகுதியில் கிளிண்டன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட போது பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் வீட்டில் இருந்தார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

சாபாக் பகுதி நியூ கேஸ்டல் போலீசாரின் கட்டுக்குள் உள்ளதால் அவர்களின் உதவியுடன் எப்.பி.ஐ மர்ம பார்சலை விசாரணை நடத்தினர்.

.