Read in English
This Article is From Jan 26, 2019

வடகிழக்கு மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட குடியரசு தின விழா

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் கூடுதல் பாதுகாப்புடன் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றனர். 

Advertisement
இந்தியா

மணிப்பூரில் ஐந்து பொது சமுதாய அமைப்புகள் குடியரசு தினத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது.

Aizawl, Mizoram:

பல பொது சமுதாயக் குழுக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து, இன்று குடியரசு தினக் கொண்டாட்டங்களை புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.  பல கிளர்ச்சிக் குழுக்கள் இந்த புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் கூடுதல் பாதுகாப்புடன் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றனர். 

நாகாலாந்தில் சக்திவாய்ந்த நாகா மாணவர் கூட்டமைப்பு (NSF) திருத்தப்பட்ட சட்ட மசோதா மக்களுக்கு எதிராக உள்ளதா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. பொதுமக்கள் அறிக்கைகள் மற்றும் எதிர் அறிக்கைகளை குழப்பிக்கொள்ளக் கூடாது என்று தேசிய மாணவர் முன்னணி வலியுறுத்தி வருகிறது. 

Advertisement

மணிப்பூரில் ஐந்து பொது சமுதாய அமைப்புகள் குடியரசு தினத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. இலாப நோக்கற்ற குழுக்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் சில பொது சமுதாய குழுக்கள் கூட்டாக இணைந்து இந்த புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

மக்களின் அடையாளப் பிரதிநிதித்துவம் மற்றும் மிசோராம் மக்களின் நிலைக் குழுவான   PRISM, இன்று குடியரசு தின விழாவில் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது. 

Advertisement

இதற்கிடையில் புதனன்று மசோதாவை எதிர்த்து பேரணி நடை பெற்றபோது இந்தியாவின் பல இந்திய-விரோத குடியேற்றங்கள் மிசோரமின் தலைநகரான அய்சால் நகரில் காணப்பட்டன.  வடகிழக்கில் உள்ள கிளர்ச்சியாளர்கள் குழு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டு இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது. 

ஜனவரி 8-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம். 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி முஸ்லீம் -அல்லாத குடியேறிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. பல சமூகக் குழுக்கள் மத அடிப்படையில் புலம் பெயர்ந்தவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக கூறுகின்றனர். வடகிழக்கில் உள்ள 4 மாநில  முதலமைச்சர்களும் மசோதா மீதான தங்கள் கவலை வெளிப்படுத்தினர். மேகாலய முதலமைச்சர் கான்ராட் சங்மா மற்றும் மிசோரம் முதலமைச்சர் சோரம்பாந்தா ஆகியோர் டெல்லிக்குச் சென்று வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்ளை எடுத்துக் கூறி சட்டத்தை அகற்றுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  

Advertisement

மணிப்பூர் முதல்வர் என். பிரன் சிங்க் ஜனவரி 29 -தேதி இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுவதைக் குறித்து அனைத்து அரசியல் கட்சிக் கூட்டம் நடத்த உள்ளது. 

Advertisement