இவர்களின் வயது 97 முதல் 100 வயதிற்குள் இருக்கும்.
New Delhi: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய ராணுவப் படையில் இருந்த 4 வீரர்கள், 70-வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர். குடியரசு தின அணிவகுப்பில் ஐ.என்.ஏ வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இவர்களின் வயது 97 முதல் 100 வயதிற்குள் இருக்கும். இந்த முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லியில் அருகில் வசித்து வருகிறார்கள்.
முன்னாள் ராணுவ வீரர்கள் திறந்த ஜீப்பில் அமர்ந்து இன்று நடந்த ராணுவ வீரர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். ராணுவ வீரர்கள் பக்மால், வயது 100, 1942-இல் ஐ.என்.ஏ-வில் சேர்ந்தார். தற்போது ஹரியானாவில் உள்ள மனனேசரில் வாழ்ந்து வருகிறார். மற்ற மூவர், லால்ட்டி ராம் (98), பன்ஞ்குலாவில் வசித்து வருகிறார். ஹிரா சிங் (97) ஹரியானாவில் உள்ள நர்னாலில் வசித்து வருகிறது. பரமானந்த் யாதவ் சத்தீஸ்கரில் வசித்து வருகிறார்.
துணை ஆணையர் மேஜர் ஜெனரல் ராஜ்பால் பூனியாவிடம் ஐ.என்.ஏவின் 4 வீரர்கள் மட்டுமே அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர், ஏன்? என்று கேள்வி எழுப்பியதற்கு “ஐ.என்.ஏ வீரர்கள் யார் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமாக உள்ளது” என தெரிவித்தார். “ஐ.என்.ஏ ராணுவ வீரர்கள் பிரிட்டீஷ் இந்திய ராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்தனர். அதனால் இவர்களின் தொடர்பை கண்டுபிடிக்க முடிந்தது” என்றார்.
1942-ல் தேசியவாத ராஷ் பிஹாரி போஸால் நிறுவப்பட்டது. இது ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போராட உருவாக்கப்பட்டது. பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இராணுவத்தின் பொறுப்பாளாராக பொறுப்பேற்றார். பல்வேறு இடங்களில் சிறைக்கைதிகளாக இருந்தவர்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட ஒன்றிணைத்தார்.
குடியரசு தின அணிவகுப்பு விஜய செளக்கில் தொடங்கி ராஜ்பாத், திலக் மார்க், பகதூர் ஷா ஸாபர் மார்க் நேதாஜி சுபாஷ் மார்க் வழியாக செங்கோட்டைக்குச் சென்றது. 90 நிமிடங்கள் நடக்கும் அணிவகுப்பில் 22 மத்திய அரசுத்துறைகள் காட்சிப்படுத்தப்படும். சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வாங்கிய M777அமெரிக்கன் அல்ட்ரா லைட் ஹவுவிட்ஸ் அணிவகுப்பில் இடம் பெற்றது. இந்தியாவின் வேகமான ரயிலான Train 18 அணிவகுப்பில் இடம் பெற்றது.