This Article is From Jan 26, 2019

குடியரசு விழா முடிவில் மக்கள் கூட்டத்திற்குள் நடந்து சென்று வாழ்த்துகளை பெற்ற பிரதமர் மோடி

Republic Day 2019: குடியரசுதின விழாவிற்கு பிரதமர் விருந்தினராக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்தார்.

குடியரசு விழா முடிவில் மக்கள் கூட்டத்திற்குள் நடந்து சென்று வாழ்த்துகளை பெற்ற பிரதமர் மோடி

Republic Day 2019: மக்கள் பலர் பாதுகாப்பு வேலியைத் தாண்டி பிரதமருடன் கை குலுக்க விரும்பினார்கள்

ஹைலைட்ஸ்

  • மே மாதத்தில் வரப்போகும் பொதுத் தேர்தலுக்கு முந்தைய அரசு நிகழ்ச்சி
  • மக்கள் பலர் பிரதமருடன் கை குலுக்க விரும்பினார்கள்
  • அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி  டெல்லியிலுள்ள ராஜ்பாத்தில் குடியரசு தின முடிவில் பாதுகாப்பு வளையங்களை கடந்து கூட்டத்தில் நடந்து சென்று மக்களின் வாழ்த்துகளை பெற்றார். 

மே மாதத்தில் வரப்போகும் பொதுத் தேர்தலுக்கு முந்தைய அரசு நிகழ்ச்சியான இதில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான பைஜாமா -குர்தா மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்தார். மேலும், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கலந்த தலைப்பாகையை அணிந்திருந்தார். விஐபிகள் அமரும் இடத்திற்கு சென்ற மோடி அதன் வழியாகவே நடந்து மக்கள் கூட்டம் வரை சென்று கையசைத்தார். மக்கள் பலர் பாதுகாப்பு வேலியைத் தாண்டி பிரதமருடன் கை குலுக்க விரும்பினார்கள். பலர் தங்களுடைய செல்ஃபோனில் படம் எடுத்துக் கொண்டனர். 

குடியரசு தின விழாவிற்கு பிரதமர் விருந்தினராக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவிலும் பாதுகாப்பை மீறிச் சென்று மக்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். சுதந்திர தின நாளின் பேச்சை முடித்து விட்டுக் கீழே வந்தவர். கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற  குழந்தைகளை சந்தித்தார்.  ஊடகங்கள் அனைத்தும் பரபரப்பாக அந்த தருணத்தை பதிவு செய்தது. குழந்தைகள் அவரை சூழ்ந்து கொண்டு  கை குலுக்கியும் செல்ஃபிகளையும் எடுத்துக் கொண்டனர்.

இன்று காலை பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்துகளை மக்களுக்கு ட்வீட் மூலமாக தெரிவித்தார். ராஜ்பாத்தில் நடைபெற்ற விழாக்களுக்கு முன்னர், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் 3 அமைச்சர்களுடன் இணைந்து  சென்று மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

ராணுவ அணிவகுப்பில் விமானப்படையின் சாகசங்களும் பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் பிரமாண்டமாக நடைபெற்றது. ராணுவ அணிவகுப்பு முழுவதும் மகாத்மா காந்தியின் 150 பிறந்த நாளை  மையப்பொருளாக வைத்து நடைபெற்றது. 

.