This Article is From Jan 21, 2019

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்

ஹைலைட்ஸ்

  • பொது இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்
  • மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
  • வாகன தணிக்கை, ரோந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன

தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நாடு முழுவதும் 26-ம்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலீசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளன.

இதைத் தவிர்த்து பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பாக குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. இந்தப் பணியில் சுமார் 1 லட்சம் போலீசார் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையில், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரையில் போலீசார் இரவு ரோந்துகளிலும், வாகன தணிக்கையிலும் அதிகம் ஈடுபடவுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக வரும் 31-ம்தேதி நள்ளிரவு வரை பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அங்கும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

.