விஜயகாந்த் சீக்கிரமே குணமடைந்து அரசியல் களத்தில் செயலாற்றுவார் என்று தேமுதிக தரப்பு தகவல் தெரிவித்து வருகிறது.
ஹைலைட்ஸ்
- உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகியிருக்கிறார் விஜயகாந்த்
- சீக்கிரமே அவர் களத்துக்கு வருவார் என்று தெரிவிக்கப்படுகிறது
- லோக்சபா தேர்தலில் தேமுதிக போட்டியிட உள்ளது
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களுக்குத் தனது குடியரசு தின வாழ்த்துகளை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் விஜயகாந்த், ‘அனைவருக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். லஞ்சம் இல்லாத ஆட்சி. யாருக்கும் அஞ்சாத நீதி. நேர்மையான திறன், மக்களோடு இணைந்து உருவாக்குவோம். முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்' என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து விலகி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் வீடியோ வெளியிட்டு குடியரசு தின வாழ்த்துகள் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களையும், தேமுதிக-வினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கட்சிப் பணிகளை விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் மற்றும் மனைவி பிரேமலதா ஆகியோர் பார்த்து வருகின்றனர்.
விஜயகாந்த் சீக்கிரமே குணமடைந்து அரசியல் களத்தில் செயலாற்றுவார் என்று தேமுதிக தரப்பு தகவல் தெரிவித்து வருகிறது.