Read in English
This Article is From Aug 14, 2019

கேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்!

இதுவரை கனமழை காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ளனர்

Advertisement
Kerala Edited by

தமிழகத்தில் இருக்கும் மக்களின் கவனத்தப் பெற தமிழில் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார் என்பது தெரிகிறது.

Chennai:

கேரளாவில் பெய்த கனமழையால், அந்த மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கனமழை காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொருளுதவி தேவைப்படும் நிலையில் கேரள மாநிலம் இருக்கிறது. இதையொட்டி, உதவி கோரும் நோக்கில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன். 

தமிழகத்தில் இருக்கும் மக்களின் கவனத்தப் பெற தமிழில் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார் என்பது தெரிகிறது. தனது தொடர் ட்வீட்களில் விஜயன், ‘இந்த வருடம் கேரளாவில் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டத்தின் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊர் மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பதார்க்கும் முடிந்த அளவு உதவி செய்ய கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. செவ்வாய் கிழமை மாலை வரைக்கும் 91 நபர்கள் உயிர் இழந்தார்கள் எனத் தெரியவந்துள்ளது. 1,243 அரசு முகாம்களில் 2,24,506 மக்கள் தங்கிவருகிறார்கள்.

நூற்றாண்டு கண்ட பெரு வெள்ளதையடுத்த ஒரு வருடம் பிறகுதான் இந்த பேரழிவு என்கிறதும் குறிப்பிடத்தக்கது. ஐ.நா மதிப்பீடு பிரகாரம் இந்த நெருக்கடியில் இருந்து மீள்தற்கு 31,000 கோடி ரூபாய் தேவை. இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. கேரள மக்களுக்கு உங்கள் உதவிகள் மிகவும் தேவையாக இருக்கிறது. சிறியதோ, பெரியதோ என வேற்பாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள்.' என்று தமிழில் கோரிக்கை வைத்துள்ளார் விஜயன்.

Advertisement

கேரள வானிலை குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல்படி, மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெட்ர் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அம்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் மணல் சரிவும் ஏற்பட்டுள்ளது. 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement