New Delhi: விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் புதிய 10, 50, 100 , 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ள நிலையில், புதிதாக ரூபாய் 20 மதிப்புள்ள நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புதிய ரூபாய் நோட்டுகள் வெளிவரும் நிலையில். மகாத்மா காந்தியின் முகத்துடன் புதிய வரிசைகள் கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் வெளிவருகிறது. மேலும் இந்த புதிய நோட்டுகள் அளவு மற்றும் டிசைனில் மாறுபட்ட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் (தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை) தவிர மற்ற பழைய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் படி மார்ச் 31,2016 வரை சுமார் 492 கோடி ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்ததாகவும். இப்போது அதை விட இருமடங்கு ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.