This Article is From Jul 26, 2018

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ பரவியதால், 3200 பேர் இடம் மாற்றம்

தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 3,200 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம் மாற்றப்பட்டுள்ளனர்

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ பரவியதால், 3200 பேர் இடம் மாற்றம்
Los Angeles:

லாஸ் ஏஞ்சல்ஸ்: தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 3,200 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் பல பகுதிகளில், 60-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் 1.2 மில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகள் சேதமடைந்தது என்று அமெரிக்காவின் தேசிய தீயணைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் சன் ஜசிண்டோ மலைகளிலும் தீ பரவியதால், பதற்றமான சூழல் நிலவுகிறது. 100 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பத்தில் காட்டுத் தீ பரவுவதால், சுற்றுச் சூழல் சேதமடைந்துள்ளது.

லேக் ஹெமெட், இட்லிவைல்ட் போன்ற பகுதிகளில் தீயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், 2100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து 3200 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

np3fv1i8

காட்டுத் தீ பரவுவது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், டெமிகுலா பகுதியை சேர்ந்த 32 வயது பிராண்டன் மெக்க்ளோவர் என்ற நபரை கைது செய்துள்ளனர். கலவரத்தில் தொடங்கிய தீ, காட்டுப்பகுதியில் பரவி இருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

புதன் கிழமை அன்று, 25% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பலர் காயம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.