This Article is From Sep 20, 2018

‘மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம்!’- பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்

‘மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம்!’- பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராக இருக்கிறது, இம்ரான் கான்

New Delhi:

பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இம்ரான் கான் எழுதிய கடிதத்தில், ‘இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் சவாலான உறவு நிலவி வருகிறது. ஆனால், நம் மக்களுக்காகவும் எதிர்கால சந்ததிகளுக்காகவும், அமைதியான முறையில் நமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை போக்கிக் கொள்ள வேண்டும். ஜம்மூ - காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்தையும் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். இரு நாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை கலைந்து சுமுகமான முடிவை எட்ட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
 

அவர் தொடர்ந்து, ‘இரு நாட்டுக்கும் அமைதியான சூழலைக் கொண்டு வர பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் சந்தித்துப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஐ.நா சபையின் பொதுக் குழு சந்திப்புக்கு முன்னர் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். நம் பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்துச் செல்ல இருவரின் சந்திப்பு உதவிகரமாக இருக்கும். இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் மாநாட்டினால், நீங்கள் பாகிஸ்தானுக்கு வரவும் நமது பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் உதவிகரமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

.