சசி தரூர் அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளனர் (File)
New Delhi: நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியின் இழப்பு குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். சதம் அடிக்கும் கிரிக்கெட் வீரனை இழந்தது போல் உணர்வதாக சசி தரூர் கூறியுள்ளார்.
“50,000 ஓட்டுகளுடன் முன்னணியில் உள்ளேன். 72சதவீதம் எண்ணப்பட்டு விட்டது. நான் சதமடிக்கும் வீரனை இழந்து விட்ட அணியை போல் உணர்கிறேன். இது ஒரு கசப்பான இனிப்பின் உணர்ச்சிதான்” என்று ட்விட் செய்து இருந்தார்.
பாஜக மக்களவை தேர்தலை பெரும்பான்மையுடன் வென்றெடுத்துள்ளது. 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளதென தெரிகிறது.
மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் வடகிழக்கில் புதிய வெற்றிகளை பெற்றுள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்றுள்ளது. கர்நாடாக மாநிலத்திலும் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றியை நாட்டுக்கு அர்பணிப்பதாகவும், இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாகவும் தனது மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.