Read in English
This Article is From Jan 08, 2020

'அமெரிக்காவை திருப்பி அடிப்பதுதான் எங்களின் தற்காப்பு' : NDTVக்கு ஈரான் தூதர் பேட்டி!!

இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகினி NDTV க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரானின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அவர், ''இறையாண்மையை பாதுகாக்க ஈரானும், ஈரானியர்களும் எந்த நிலைக்கும் செல்வோம். இதனை அமெரிக்கா உள்ளிட்ட எதிரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் தாக்குதல் அமைந்தது'' என்று கூறினார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

அமெரிக்காவை திருப்பி அடிப்பதுதான் எங்களுக்கு தற்காப்பாக அமையும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செங்கினி NDTV க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

ஈராக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 2 அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது 15 ராக்கெட் ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. கடந்த வாரம், ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதுகுறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகினி என்.டி.டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில், 'நாங்கள் நடத்திய தாக்குதல் குறித்து ஒவ்வொரு ஈரானியரும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். ஏவுகனை தாக்குதலை நாங்கள் மறைமுகமாக நடத்தாமல் நேரடியாக நடத்தியிருக்கிறோம். எங்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்காக அதனை திருப்பி அடிப்பதுதான் எங்களது தற்காப்பாக அமையும். 

ஈரானின் இறையாண்மையை அரசும், ஈரானியர்களும் பாதுகாப்போம். இந்த தகவலைத்தான் ஏவுகனைத் தாக்குதல் மூலமாக அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம்.

Advertisement

எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலுக்கு அவசியம் ஏதும் இருக்காது என்று கருதுகிறேன். இது எங்களுடைய கடைசி தாக்குதலும் அல்ல. இந்த சம்பவம் இரு தரப்பிலிருந்தும் இனி ஏற்படாது என்று எண்ணுகிறேன்' என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைனுக்கு 176 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏவுகனை மூலமாக இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

Advertisement

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஈரான் தூதர், 'விபத்து ஏற்பட்டிருப்பது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இப்போதைக்கு விபத்து எதனால் ஏற்பட்ட என்பதுபற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று நாங்கள் கருதவில்லை. இதனை தொழில்நுட்ப வல்லுனர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்திருப்பது மற்ற நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. 

Advertisement

ஈரான் ராணுவத்தின் தளபதியும், ஈரான் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவருமான ஜெனரல் காசிம் சுலைமானி கடந்த வாரம் அமெரிக்காவின் ட்ரோன் விமானங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இந்த சம்பவம் நடந்தது. 

இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகனைத் தாக்குதலை நடத்தியது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று கூறியுள்ளார். ஈரான் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

Advertisement

இந்தியாவும், ஈரானும் பாரம்பரியமாக நல்ல உறவில் உள்ளன. அமெரிக்கா ஈரானுக்கு பொருளாதார தடைகள் விதித்தபோதிலும், அந்நாட்டுடன் இந்தியா இணக்கமாக இருந்தது. கடந்த மே மாதம் முதல், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்திக் கொள்ளப்பட்டது. 
 

Advertisement