This Article is From May 07, 2020

ஓய்வு வயது உயர்வு; வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும்: முத்தரசன்

வேலை தேடி வருவோருக்கும், வேலையில் இருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்

Advertisement
தமிழ்நாடு Edited by

Highlights

  • வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும்
  • பணியில் உள்ளோரின் பணி உயர்விலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்தி இருப்பது வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும். என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது, "அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு வயது 58 என்பதை 59 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்த உத்தரவு மூலம் 31.05.2020 ஓய்வு பெறுவோர் அனைவரும் மேலும் ஓராண்டு காலம் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வி பெற்று, பல்வேறு திறன்களில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் உட்பட ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும்போது, அதி முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் கூட ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்தி இருப்பது வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும்.

Advertisement

மேலும், பணியில் உள்ளோரின் பணி உயர்விலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். வேலை தேடி வருவோருக்கும், வேலையில் இருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement