ஒன்றிணைந்த காங்கிரஸ் VS பாஜக: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!
ஹைலைட்ஸ்
- காங்கிரசுக்கு ஆதரவாக 125 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்
- ஒட்டுமொத்த சட்டபேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 200
- பாரதிய ஜனதா கட்சிக்கு 72 எம்.எல்.ஏக்களின் ஆதரவு
Jaipur: ராஜஸ்தான் மாநில சட்ட பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதாக சட்ட பேரவை சபாநாயகர் அறிவித்துள்ளார். "அசோக் கெஹ்லாட் பாஜகவுக்கு ராஜஸ்தானில் ஒரு பாடம் கற்பிற்பிப்பார். கோவா அல்லது மத்திய பிரதேசத்தை போல இங்கு அதிரடி திருப்பங்கள் நடக்க நாங்கள் அனுமதிக்கவில்லை" என்று ராஜஸ்தான் அமைச்சர் சாந்தி குமார் தரிவால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்வைத்த பின்னர் கூறியிருந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக 125 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டுமொத்த சட்டபேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 200 ஆகும். இதில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக ஏற்கெனே 102 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், தற்போது கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவும் கிடைத்தது.
அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லா விட்டாலும் கூட இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்போம் என கெலாட் தரப்பு கூறியிருந்தது. ஆனாலும், திரும்பி வந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம் என்றும் கெலாட் தரப்பினர் கூறியுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சிக்கு 72 எம்.எல்.ஏக்களின் ஆதரவும், அதனைத் தொடர்ந்து கூடுதலாக மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் தற்போது, சமரசம் அடைந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக பேரவையில் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம் வைத்திருந்த நிலையில், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த உள்ளார்.
தனது பெரும்பான்மையை நிரூபித்து அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த சல சலப்புகளும் இன்றி ஆட்சியை நடத்த அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, சட்டசபை கூடுவதற்கு முன்பாக, அசோக் கெலாட் தனது ட்விட்டர் பதிவில், கட்சியின் சமரசம் என்பது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஒற்றுமைக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும், உண்மைக்கு கிடைத்த வெற்றியாகும், சத்யமேவ ஜெயதே என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்திற்கு முன்பாக அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை ஜெய்ப்பூரில் முதல்வர் அவரது இல்லத்தில் நேற்று கைகுலுக்கி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, இரண்டு தலைவர்களும் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துகொண்டனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் கெலாட் அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில், பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதலாக ஒரு உறுப்பினரின் ஆதரவு 102 ஆக மட்டும் இருந்த நிலையிலே முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருந்தார்.
தற்போது, சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பியதால், கெலாட்டின் பலம் 125 ஆக இருக்கும். கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போல, ஆட்சியை கவிழ்க்க சச்சின் பைலட் பாஜகவுடன் பேரம் பேசியதாக முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.
சட்டசபையில் முதல்வர் ஒரு நம்பிக்கை தீர்மானம் கோரினால், அது விதிகளின் படி, வேறு எந்த உறுப்பனர் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் விட முன்னதாக இருக்கும்.
பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இது அசோக் கொலாட்டுடன் சட்டப்பேரவையில் மோதுவதற்கு போதுமானதாக இருந்தது. எனினும், சச்சின் பைலட் அணி மனம் மாறுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
எதிர்க்கட்சி தனது அணியை பலப்படுத்தவோ அல்லது எந்தவொரு மூலோபாயத்தையும் திட்டமிடுவதாகவோ கூட தெரியவில்லை, அதன் ராஜஸ்தான் தலைவரான வசுந்தரா ராஜே மவுனத்தை கடைப்பிடித்து வருகிறார்.
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.