Read in English
This Article is From Mar 25, 2019

செய்திகளை அறிய ஆங்கிலம் பேசும் இந்தியர்களின் முதல் தேர்வு NDTV - ராய்ட்டர்ஸ் ஆய்வில் தகவல்

சர்வேயில் பங்கேற்றவர்களில் 47 சதவீதம்பேர் செய்திக்காக என்.டி.டி.வி இணையதளத்தை பார்ப்பதாவும், 56 சதவீதம்பேர் என்.டி.டி.வி. தொலைக்காட்சியை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

செய்திகளை அறிய ஆங்கிலம் பேசும் இந்தியர்களின் முதல் தேர்வாக என்.டி.டி.வி. இருக்கிறது என்று ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் ஜேனலிஸம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த நிறுவனம் இங்கிலாந்தின் ஆகஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் செய்திகளில் பல போட்டிகள் இருந்தபோதிலும், பயன்பாட்டாளர்களின் முதல் சாய்ஸாக என்.டி.டி.வி. இருந்து வருகிறது. 

இதேபோன்று டிவி செய்தியில் என்.டி.டி.வி. 24*7 முன்னணியல் இருப்பதாக ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் செய்திகளை பொறுத்தளவில் பயன்பாட்டாளர்கள் மொபைல் மூலமாகவே அதிக செய்திகளை தெரிந்து கொள்கின்றனர். 
 

சர்ச் எஞ்சின், சமூக வலைதளம், மெசேஜ், நோடிபிகேஷன் உள்ளட்டவை செய்திகளை அறிவதன் அடிப்படை தளமாக இருக்கின்றன. வதந்திகள் பரவுவது, தவறான தகவல்களை அளிப்பது, ஒரு சார்புத் தன்மை, பாகுபாட்டுன் செய்திகளை வழங்குவது உள்ளிட்டவை டிஜிட்டல் செய்தி தளத்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தராது. 

இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட ஆய்வில் 47 சதவீதம் பேர் என்.டி.டி.வி. ஆன்லைனை தங்களது முதன்மை தேர்வாக குறிப்பிட்டுள்ளனர். 56 சதவீதம்பேர் என்.டி.டி.வி. 24*7-யை பார்ப்பதாக கூறியுள்ளனர். 

ஸ்மார்ட் போன்கள்தான் மற்ற தளங்களை விட செய்திகளை அறிந்து கொள்வதில் முன்னணியில் உள்ளதென்று ராய்ட்டர்ஸ் சர்வேயில் தெரியவந்துள்ளது. இதனை 68 சதவீதம்பேர் பயன்படுத்தி செய்திகளை அறிகின்றனர். சர்ச் எஞ்சின் மூலம் 32 சதவீதம்பேரும், சோஷியல் மீடியா வழியாக 24 சதவீதம் பேரும் செய்திகளை அறிகின்றனர். 

Advertisement

55 சதவீதம்பேர் ஆன்லைனில் அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் இதனால் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஜனவரி 2019-ல் யூகோ நிறுவனம் ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் ஜேனலிஸம் மூலம் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளனர். 

இதன் விவரங்களை இந்த லிங்க்கில் பார்க்கலாம்.  here.

Advertisement
Advertisement