New Delhi: ஓரினச்சேர்க்கையை குற்றமாக பாவிக்கும் பிரிட்டானிய கால சட்டம் குறித்தான மேல்முறையீடு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதும் சட்ட சாசனப் பிரிவு 377 குறித்து பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ‘பிரிவு 377, சட்ட சாசனத்தை மீறும் வகையில் இருக்கிறது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், ‘பரிவு 377 செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, பிரிவு 377-ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தெரிந்துகொள்ள வேண்டியவை,
கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்க மாற்றி உத்தரவிட்டது. அப்போது, ‘சமூகம் காலத்துக்கு ஏற்றாற் போல மாறி வரும். ஒருவருக்கு இயற்கையாக தெரிவது, மற்றொருவருக்கு செயற்கையாக தெரியும்’ என்று கூறியது.
‘ஒரு தனி மனிதன், தனது தனிப்பட்ட முடிவை எடுப்பதற்கு எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் அது சட்டத்தை மீறும் வகையில் இருக்கக் கூடாது. ஆனால், சட்டம் அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது’ என்றும் அப்போது வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
பிரிவு 377-ல், ‘யாராவது இயற்கைக்கு மாறாக உடலறவு வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ விதிக்கப்படும்’ என்று கூறுப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ஓரினச்சேர்க்கை குற்றமாகக் கருத முடியாது என்று தீர்ப்பளித்தது.
ஆனால் 2013 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமாக அறிவித்தது. மேலும், பிரிவு 377-ஐ தகர்க்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றலாம் என்று கூறியது.
மத்திய அரசு பிரிவு 377-க்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது.
ஆனால் மத்திய அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, ‘உலகின் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் பேர் ஓரினச்சேர்க்கையாளராக இருக்கும் போது, தற்போது அப்படி செய்யக் கூடாது என்று சொல்வது முறையல்ல’ என்று கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய எதிர்கட்சிகள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.