This Article is From Nov 13, 2018

சபரி மலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வுமனு இன்று விசாரணை

சபரி மலை கோயிலுக்குள் (Sabarimala Temple) தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிரான மறு ஆய்வு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது

சபரி மலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வுமனு இன்று விசாரணை

கேரள மாநிலம் சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலம் காலமாக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பரபரப்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என அன்றைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறிப்பிட்ட தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் பெருவாரியான மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்தது.

இதேபோன்று கோயிலை நிர்வாகம் செய்து வரும் திருவிதாங்கூர் போர்டும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று அறிவித்தது. இதனால் கேரளாவில் பெருவாரியான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இருப்பினும், ஐயப்ப பக்தர்கள் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இதில் இன்றைய தினம் ஏதேனும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

.