Read in English
This Article is From Nov 18, 2018

இந்தியர்கள் வெளியேறினால் அமெரிக்காவுக்கு ஆபத்து: ட்ரம்ப்பை எச்சரிக்கும் சட்ட வல்லுனர்கள்!

ஹச்1 பி விசா தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை இந்தியர்கள் தான் அதிகம் பெறுகிறார்கள். ஹச்4 விசாவும் இவர்களது நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படுகிறது.

Advertisement
உலகம்

சட்ட வல்லுனர்கள் இஸோ மற்றும் ஸோ ஆகியோர் வைத்த வாதத்தில் ஒபாமா கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அதனை மாற்றுவது சரி அல்ல. இது அமெரிக்காவுக்கு ஆபத்தானது

Washington:

அமெரிக்க சட்ட வல்லுனர்கள் அதிபர் ட்ரம்புக்கு எதிரான அபயக்குரலை எழுப்பியுள்ளனர். அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு ஹச்1 பி விசாவும், அவர்களது மனைவி/கணவருக்கு ஹச் 4 விசாவும் வழங்கப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் அரசு அதிரடி முடிவுகளை எடுக்க ஆரம்பித்தது. இதனை எதிர்த்த சட்ட வல்லுனர்கள் இப்படியே இதனை வளரவிட்டால் இங்குள்ள வெளிநாட்டு திறமைசாலிகள் சொந்த நாட்டிக்கு சென்று அமெரிக்க வர்த்தகத்துக்கு போட்டியாளர் ஆவார்கள் என எச்சரித்துள்ளனர்.

இந்த ஹச்1 பி விசா தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை இந்தியர்கள் தான் அதிகம் பெறுகிறார்கள். ஹச்4 விசாவும் இவர்களது நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படுகிறது.

"சட்ட வல்லுனர்கள் இஸோ மற்றும் ஸோ ஆகியோர் வைத்த வாதத்தில் ஒபாமா கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அதனை மாற்றுவது சரி அல்ல. இது அமெரிக்காவுக்கு ஆபத்தானது" என்று கூறினர்.

Advertisement

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்றனர்.

"வெளிநாட்டவருக்கு அளிக்கும் விசா சலுகை இல்லையெனில் அமெரிக்காவின் வர்த்தகம் வீழும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மனதில் கொண்டு இந்த சட்டத்தை திரும்ப பெற்று ஹச்1பி மற்றும் ஹச் 4 விசா கெடுபிடிகளை தளர்க்க வேண்டும்" என்று ட்ரம்புக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

Advertisement

 

Advertisement